Thursday 31 May 2018

திருச்செங்கோடு ஸ்ரீமது குலோத்துங்க வேதநாயக பண்டித குருசாமிகள் திருமடம்.










காணிகள் - கோத்திரங்கள்


1. இலுப்புலி - செல்லன் கோத்திரம்
2. கொன்னையார் - செல்லன் கோத்திரம்
3. கொக்களை - செல்லன் கோத்திரம்
4. பருத்திப்பள்ளி - செல்லன் கோத்திரம்
5. அனுமன்பள்ளி - செல்லன் கோத்திரம்

6. இடையார் - செல்லன் கோத்திரம்

7. எழுமாத்தூர் - செல்லன் கோத்திரம்


ஆகியோரது திருச்செங்கோடு மடத்து குருக்கள். குலகுருக்கள் அல்ல.


முகவரி:

N. மகாதேவன் குருக்கள், 

குலோத்துங்க வேதநாயக பண்டிதகுருசாமிகள் திருமடம்,

44/101, தெற்கு ரத வீதி ,

(ராமு சைக்கிள் ஸ்டாண்ட்),

திருச்செங்கோடு - 637211

Mob: 94420 01431

Landline: 04288-254972



ஶ்ரீமத் குலசேகர பட்டர்

திருச்செங்கோடு பட்டத்து குருக்கள் 1: குலசேகர பட்டர் 


ஸ்ரீமது சுப்பிரமணிய பண்டித குருசாமிகள் திருமடம்

(கீழ்கண்ட கோத்திரத்தாரின் திருச்செங்கோடு கோயில் பட்டத்து குருக்கள் - குலகுருக்கள் வேறு)






காணிகள் - கோத்திரங்கள்:

1. மோரூர் - கண்ணன் கோத்திரம்

2. மொடக்குறிச்சி - தூரன் கோத்திரம்

3. கிழாம்பாடி - கண்ணன்

4. குமாரமங்கலம் - தூரன், வில்லி, விழியன், பாண்டியன், ஈஞ்சன்


----------------------------------



திருச்செங்கோடு எட்டுக்கோத்திரத்தார் செப்பேடு




ஸ்வஸ்திஸ்ரீமத் மகாமண்டலேசுவர அரியராய விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் துலுக்கதள விபாடன் ஒட்டியதள விபாடன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் ராஜாதிராஜன் ராஜமார்த்தாண்டன் ராஜகெம்பீரன் ராஜபரமேசுவரன் ராஜமனோகரன் போருக்கு வீமன் புயபலவீரன் சொல்லுக்கு அரிச்சந்திரன் உத்தம குணத்தான் ஒரு சொல்லுக்கு வாசகன் பத்திவரதன் பரசுராமனைப்போலவும் அஜபதி கஜபதி நவகோடி நாராயணன் கெசவேட்டை கண்டருளிய பூர்வ தெட்சிண பச்சிம உத்தர சப்த சமுத்திர தேசாதிபதியாகிய ஸ்ரீ விஜயமாநகரில் பிறதாபரான ராஜேந்திரசோழன் மனுநீதி கொண்ட சோழன் கொங்கணராயன் பூறுவதேவர் பிருத்வி ராஜ்யபாரம் பண்ணி அருளாநின்ற காலத்தில்


நீதிபர ஆறில் ஒரு கடமைகொண்ட சேரன் சோழன் பாண்டியன் மூவராஜாக்களும் செல்லாநின்ற ஸ்வஸ்திக் கலியுக சகாப்தம் வருஷம் 4029க்கு மேல் செல்லாநின்ற விபவ நாம சம்வத்சரம் உத்தராயணம் மகர மாச பூர்வபட்ச குருவாரம் சதுர்த்திசிஉயும் விசாக நட்சத்திரமும் பாலவாகரணமும் அமுர்த சித்த்யோகமும் பெத்த சுபதினத்தில் கொங்கு நாட்டில் ஸ்ரீமது முள்வாய்சூழ் துரைத்தனத்து சங்ககிரி துர்க்கத்துக்கு சேர்ந்த கீள்கரைப் பூந்துறை நாட்டில் கொங்குமண்டலம் தெட்சிண காலாசத்தில் அர்த்தநாரீசுவரர் கிருபாகடாட்சத்துனாலே சேரன் சோழன் பாண்டியன் மூணு ராசாக்களும் கொங்கு தேசம் வந்து பார்க்கவேணும் யென்று சேனைகளோடு புறப்பட்டு வந்து இருப்பார். அந்தக் காலத்தில் கொங்கு தேசத்து ராசன் அரூபத்தை அடைந்தான் என்று சங்கதி தெரிந்து மூணு பேரும் ஒரு ஸ்தலத்திற்கு வந்துசேனைகளோடே இருந்துகொண்டு சிவ ஸ்தலங்கள் விஷ்ணு ஸ்தலங்கள் பிரபல்யம் செய்துகொண்டு வந்தார்கள்.


வரும்போது கோதையூருக்கு வரும்போது மலை சார்வில் அநேக ஆச்சரிய விஷயங்களைக் கண்டு சுவாமி அனுக்கிரகத்தினால் சிவ ஸ்தலங்கள் விஷ்ணு ஸ்தலங்கள் ஜீரணோத்தாரணம் பண்ணி சோபானமார்க்கங்கள் குளங்கள் தடாகங்கள் உண்டாக்கி பந்தியா பாஷணத்தில் சிவாலய பிரதிஸ்ஃடையும் பண்ணி சுவாமி பூசைக்கு ஆதிசைவாளை நேமுகம் செய்ய வேணும் என்று மூணு ராஜாக்களும் கூடி சீர்காழியில் சோமசம்பு சிவாச்சாரியார் குமாரன் குலசேகரபட்டர் இருக்குறார் அவருக்குத்தான் இந்த ஸ்தல மகத்தியம் தெரியும் என்று அவரை அழைச்சு வரவேணும் என்று மூணு ராஜாக்களும் யோசனை செய்து அவரை போய் அழைத்துவந்து கும்பாபிஷேகம் முதலானதுகள் செய்து திருச்செங்கோடு என்ற நகரம் உண்டாக்கி சைவாகம விதிப்படிக்கு பூசை கொண்டருளிய குலசேகரபட்டருக்கு நானூத்தித் தொண்ணூற்றாறு பொன் ரேகை மானியம் விட்டு சூலக்கல்லும் ஸ்தாபிச்சு வாதுளாகம விதிப்படி பஞ்சாட்சர உபதேசம் மூணு ராஜாக்களும் குலசேகரபட்டரிடத்தில் பெற்றுக்கொண்டு


நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஏர்குடி எண்ணாயிரம் காராளர்களைத் தருவிச்சு வைத்து யாபாரஸ்தாளை ஸ்தாபிதம் செய்து கொங்கு இருபத்துநாலுநாட்டுக்குப் பட்டக்காரன் எற்படுத்தி இருபத்தி நாலு பட்டக்காரர்கட்கும் பட்டத்தைச் சூட்டி ஒரு தலை போனால் தங்கத்திலே ஏழு தலை பத்துப்பொன் அபராதம் வாங்கும்படியாய் ஆக்ஞாபிச்சுவிட்டு ஸ்தலங்கள் தோறும் பரிபாலனம் பண்ணிக் கொண்டு காசியில் கெங்கா ஸ்நானம் பண்ணுவதற்கு மூணு ராஜக்களும் போய்விட்டார்கள்.


கீழ்க்கரைப் பூந்துறைநாட்டில் மோரூரில் வேளாள கண்ணர்குல கோத்திரம் பூஷறசூத்ரம் நல்லதம்பி கொங்கு மண்றாடியானும் இம்முடி நல்லதம்பிக் காங்கயன் சூரிய காங்கயன் குமாரகாங்கயன் அத்தப்ப காங்கயன் மேல்கரை பூந்துறை நாட்டில் முடக்குறிச்சியில் இருக்கும் வேளாள தூர குல கோத்திரம் பூஷற சூத்திரம் அத்தப்ப சர்க்கரை மன்றாடியார் குட்டைய கவுண்தர் பிச்சாண்டாக்கவுண்டன் குட்டிக்கவுண்டன் நல்லதம்பிக்கவுண்டன் கிளாம்பாடியில் இருக்கும் கண்ணகுல கோத்திரம் வாரணவாசிக்கவுண்டன் ராக்கியாக்கவுண்டன் குமரகவுண்டன் செட்டியாக்கவுண்டன் விலையகுல கோத்திரத்தில் வேலகவுண்டன் வில்லி குலகோத்திரம் அர்த்தநாரிக் கவுண்டன் பாண்டியகுலகோத்திரம் பாண்டிக் கவுண்டன் ஈஞ்சகுல கோத்திரம் அமராவதிக் கவுண்தன் அனைவரும் கூடி


கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வர சுவாமி சந்நிதியில் சைவாகம விதிப்படி பூசைகொண்டருளிய குலசேகர பட்டரிடம் நாங்கள் எட்டுக் கோத்திரத்தாரும் பட்டக்காரர்களும் அனைவரும் வாதுளாகம விதிப்படி பஞ்சாட்சர உபதேசம் பெற்றுக்கொண்டு சுவாமியார் குலசேகரபட்டருக்கு சிவபூசைக்கு மடாலயம் கட்டி குரு பிரதிஷ்டையும் செய்து பிராமண சம்வர்த்தனையும் செய்து மடத்துக்கு சிவபூசைக்காக கலியாணமானவர்களுக்குப் பாதகாணிக்கை மதுரை சக்கரம் இரண்டு பணம் குடுக்கிறது. இந்தப்படிக்கு நாங்கள் கொடுத்து வருகிறோம் என்று அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியில் வாக்குத் தத்தம் பண்ணிக்கொடுத்தோம் சுவாமியார் குலசேகரபட்டருக்கு சிவிகை சத்திரை தாமரை கத்தி கடோரி பூச்சக்கரக்கொடை விருதுகள் எல்லாம் கொடுத்து மிரவணையும் செய்து எங்கள் வமிசபாரம் பரியமாக எட்டுக்கோத்திரத்தாரும் குலகுருவாயிருந்து வருஷப்பிரதி எங்களுக்கு தீட்சையும் பிரசாதமும் கொடுத்து பாதகாணிக்கையும் பெத்துக் கொண்து வருகிறது என்று நாங்கள் அனைவரும் கூடி எழுதிக்கொடுத்த செப்பேடு பட்டயம். சந்திராதித்தர் உள்ள வரைக்கும் அனுபவித்துக்கொண்டு சுகத்தில் இருக்க இந்த சுதந்திரம் நாங்களனைவரும் கூடி எழுதிக்கொடுத்தபடிக்கி நடத்தி வைப்போமாகவும்.


இந்த சுதந்திரம் சந்திராதித்தர் உள்ள வரைக்கும் எட்டுக் கோத்திரத்தாரும் நடத்தி வைக்கக் கடவோமாகவும். இதற்கு யாதாமொருத்தன் யிடகூறு செய்தானாகில் கெங்கைக்கரையில் காராம்பசுவைக் கொண்ண தோஷத்தாலும், பிராமணாளைக் கொண்ண தோஷத்தாலும் மடம் தேவாலயம் சின்னப்படுத்திய தோஷத்தாலும் போகக்கடவாராகவும் இந்தப்பட்டயம் எழுதினபடிக்கு பரிபாலனம் செய்து கொண்டு வந்தபேருக்கு திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபாராதனை தெரிசித்த பலனும் சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசனம் தெரிசித்த பலனும், மதுரையில் சொக்க நாதரையும் மீனாட்சியம்மனையும் தெரிசித்த பலனும், காசியில் கெங்கா ஸ்நானம்பண்ணி விசுவநாதரையும் விசாலாட்சியையும் தெரிசித்த பலனும் கொங்குமண்டலத்தில் தெட்சிண கைலாசத்தில் ஸ்ரீ அர்த்தநாரீசுவர சுவாமியைத் தெரிசித்த பலனும் உண்டாகத் தக்கதாகவும்.


இந்தப்படிக்கு எட்டுக்கோத்திரத்தார் அனைவரும் கூடி குரு பிரதிஷ்டையும் செய்து தீர்த்தப்பிரசாதம் பெற்றுக்கொண்டோம். இதற்கு சாட்சிகள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் நல்லதம்பி கொங்கு மன்றாடியார் மேல்கரைப் பூந்துறை நாட்டில் அத்தப்ப சர்க்கரை மன்றாடியன் குலோத்துங்கபட்டர் ஆச்சாரிய மறையோரில் கவுணிய கோத்திரம் அர்த்தனாரி அய்யர் பாண்டிய குலத்தில் பாண்டியகவுண்டன் வில்லிகுலத்தில் வேலகவுண்டன் நாட்டு வேலகவுண்டன் இந்தப் பட்தயம் எழுதின நம்பிக்கு அர்த்தநாரீசுவரர் நல்லபுள்ளியம்மன் பொன்காளியம்மன் கரியகாளியம்மன் ரெட்சித்துத் துணை செய்யவும். ஸ்ரீ பாண்டீசுவர சுவாமி சகாயம் பாபவிநாச தீர்த்தக்கரையில் சிலா பிரதிஷ்டையும் விஸ்தாரமாக செய்து இருக்கிறோம்.


---------------------------------



குருக்கள் முகவரி:

எம்.எஸ். விசுவநாத குருக்கள்,

தெற்கு அக்ரகார வீதி,

திருச்செங்கோடு.


செல்: 9443351851